உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சில்ஹல்லா மின் திட்டத்திற்கு எதிர்ப்பு; மஞ்சூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

சில்ஹல்லா மின் திட்டத்திற்கு எதிர்ப்பு; மஞ்சூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி; மஞ்சூரில் சில்ஹல்லா மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். மஞ்சூர் அருகே, சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே, 75 மீட்டர் உயரத்தில் ஒரு அணை மற்றும் குந்தா ஆற்றின் குறுக்கே, 108 மீட்டர் உயரத்தில் ஒரு அணை எழுப்பி, இவற்றை முறையே மேலணை மற்றும் கீழ் அணையாக கொண்டு, 2.8 கி.மீ., துாரத்திற்கு குகை வழி நீர் குழாய்கள் அமைத்து இந்த நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மொத்தம், 980 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 'இந்த திட்டத்தால் மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களை விவசாயிகள் இழக்க வேண்டி வரும்,' என கூறி, 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சில்ஹல்லா நீர் பிடிப்பு பகுதி பாதுகாப்பு குழு சங்க தலைவர் சிவலிங்கம் தலைமையில், நேற்று பெண்கள் உட்பட திரளான மக்கள் மஞ்சூரில் திரண்டு மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை அரசு கைவிட வலியுறுத்திதனர். இதில், பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஸ்வரி, வக்கீல் விஜயன், படுக தேசபார்டி தலைவர் மஞ்சை மோகன், சுப்ரமணி, வேணுகோபால் உட்பட பல கிராம தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை