மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
6 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
6 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
6 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
6 hour(s) ago
கூடலுார்;'மூன்று வாசனை திரவிய பண்புகளைக் கொண்ட, 'சர்வ சுகந்தி' மரங்களை, 'விவசாயிகள் ஊடு பயிராக நடுவதன் மூலம் கூடுதல வருவாய் ஈட்ட முடியும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடலுார் பகுதி, குறுமிளகு, ஏலக்காய் செடிகள், கிராம்பு, கருவப்பட்டை மரங்கள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் வளரக்கூடிய முக்கியமான பகுதியாகும். விவசாயிகள் இவைகளை, ஊடுபயிராகவும், தனியாகவும் பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர்.அதே போன்று, ஜாதிக்காய், சின்னமன் (கருவ பட்டை), கிராம்பு ஆகிய பண்புகளை ஒன்றாக கொண்ட 'சர்வ சுகந்தி' மரங்களை ஊடுபயிராகவும், வயல்களின் ஓரங்களில் நடுவதன் மூலம், விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். பொன்னுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரசன்னகுமார் கூறுகையில், ''ஜாதிக்காய், சின்னமன் (கருவபட்டை), கிராம், இவைகளின் பண்புகளை சர்வ சுகந்தி மரம பெற்றுள்ளதால், இதன் தேவை அதிகமாக உள்ளது. மித வெப்பமண்டல ஈர காடுகளின், மழை அதிகம் உள்ள பகுதிகளில் வளர கூடியது.அதற்கான சூழல் கூடலுாரில் உள்ளது. இவைகளை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம், இலை மற்றும் பழங்களிலிருந்து கூடுதல் வருவாய் பெறமுடியும். ஒரு ஏக்கருக்கு 150 மரங்களை நடவு செய்யலாம்.அழிந்து வரும் நிலையில் உள்ள இதனை, பொன்னுார் தோட்டக்கலைப் பண்ணையில், உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனைக்கு செய்ய தயார் நிலையில் உள்ளது,'' என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago