உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் சாய்ந்த மரத்துக்கு மறுவாழ்வு; அடுத்த 25 ஆண்டுகளுக்கு நன்றாக இருக்கும்

மழையால் சாய்ந்த மரத்துக்கு மறுவாழ்வு; அடுத்த 25 ஆண்டுகளுக்கு நன்றாக இருக்கும்

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் மழையால் சாய்ந்த மரத்துக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 500க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணியர் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட பல வண்ண மலர்களை ரசிக்க செல்கின்றனர். கடந்த சில நாட்களாக ஊட்டியில் அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் இருந்து 'பாட்டில் பிரஷ்' என்ற மரம் வேருடன் சாய்ந்தது.பூங்கா நிர்வாகம் அந்த மரத்தை அப்புறப்படுத்தாமல் மீண்டும் அந்த மரத்தை துாக்கி நிறுத்தி கயிறு கட்டி மறுபடியும் நட்டு மறுவாழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'இதன் தாவரவியல் பெயர் 'கேலீஸ்டா மோன் விமுனாலிஸ்' ஆகும். இந்த மரம், 50 ஆண்டுகள் வளரக்கூடியவை. தற்போது நடப்பட்ட மரம் மீண்டும் துளிர்விட்டால் , அடுத்த 25 ஆண்டுகளுக்கு நன்றாக இருக்கும்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை