மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
14 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
14 hour(s) ago
கோவில்பாளையம், : கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடந்தது.சரவணம்பட்டியில் துவங்கி, குரும்பபாளையம், கோவில்பாளையம், கணேசபுரம், அன்னூர் வழியாக புளியம்பட்டி வரை இருபுறமும் தலா ஐந்து அடி அகலப்படுத்தும் பணி ஒன்றரை ஆண்டுகளாக நடக்கிறது. இந்நிலையில் அகலப்படுத்தப்பட்ட சாலை முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கோவில்பாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நெடுஞ்சாலையில் உள்ள விளம்பர பலகைகள் சிறு மேடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நேற்று பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' கோவில்பாளையத்தில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கணேசபுரம் மற்றும் அன்னூரிலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே சாலையை அகலப்படுத்தியதன் பயன் வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும். விபத்துக்கள் குறையும்,' என்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago