உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முட்புதரை அகற்றினால் விபத்தை தவிர்க்கலாம்

முட்புதரை அகற்றினால் விபத்தை தவிர்க்கலாம்

கூடலுார் : 'கூடலுார் தேவர்சோலை சாலையில் விபத்துகளை தவிர்க்க சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பிரிந்து செல்லும் தேவர்சோலை சாலை, கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரியை இணைகிறது. இதனால், இச்சாலையில், உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி வெளி மாநில வாகனங்களும் அதிகளவில் இயங்கி வருகின்றன.இச்சாலையில், 2வது மைல் முதல், தமிழக கேரளா எல்லையான பாட்டாவயல் வரை, பல இடங்களில் குறிப்பாக வளைவான பகுதிகளில், செடிகள், முட்புதர்கள் வளர்ந்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதனை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டுனர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அதிருப்தி அடைந்துள்ள ஓட்டுனர்கள் கூறுகையில்,'கூடலுாரில் இருந்து பிரிந்து கேரளா சுல்தான் பத்தேரியுடன் இன்னைக்கும் இச்சாலையில் ஏராளமான சிறிய வளைவுகள் உள்ளன. சாலையில், வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்தை ஏற்படும் ஆபத்து உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன், இவைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ