உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆங்கிலேயர் கால மின் கம்பம் மாற்றினால் ஆபத்து நீங்கும்

ஆங்கிலேயர் கால மின் கம்பம் மாற்றினால் ஆபத்து நீங்கும்

பந்தலுார்; பந்தலுார் அருகே அயனிபெறா கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட மின் கம்பத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியில் முள்ளன்வயல் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து அயனிபெறா செல்லும் சாலையோரத்தில் ஆங்கிலேயர் காலத்தில், மின் கம்பம் நடப்பட்டு மின் வினியோக பணிகள் நடந்தது. தொடர்ந்து, மும்முனை இணைப்பு வழங்கும் வகையில் புதிதாக மின்கம்பமும் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பழமையான மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ