உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பந்தலுார்; வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பெயர் திருத்த ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சரண்டர் பில்களை வழங்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை ஊழியர்கள் அலுவலக வளாகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலுாரில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகி ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ