உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீவிரமடையும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; உள்ளூர் மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை

தீவிரமடையும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; உள்ளூர் மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை

கூடலுார்; 'கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடலுார், முதுமலை, தேவாலா, நடுவட்டம் பகுதிகளில் நடப்பு ஆண்டு முன்னதாக தென்மேற்கு பருவ மழை துவங்கியது. தொடரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், ஆறுகள், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதில், கூடலுாரில் உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார் - -புன்னம்புழா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 'பொதுமக்கள் ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம்,' என, வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையின் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளோம். ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்று பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை