மேலும் செய்திகள்
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
14 minutes ago
மாவனல்லாவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் புனரமைப்பு பணி
15 minutes ago
58வது தேசிய நூலக நிறைவு விழா
16 minutes ago
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை
16 minutes ago
குன்னூர்: தென் மாநில அளவிலான தேயிலை ஏலங்களில், 46.18 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 47வது ஏலத்தில், 16.02 லட்சம் கிலோ இலை ரகம், 4.39 லட்சம் கிலோ டஸ்ட என, 20.41 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.19.23 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 111.70 ரூபாய் என இருந்தது. மொத்த வருவாய், 21.49 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவிற்கு ஒரு ரூபாய் உயர்ந்தது. கடந்த ஏலத்தில், 18.62 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 17.51 லட்சம் கிலோ விற்றது. 1.79 லட்சம் கிலோ வரத்து உயர்ந்ததுடன், 1.72 லட்சம் கிலோ கூடுதலாகவும் விற்றது. 19.39 கோடி ரூபாய் வருவாய் இருந்த நிலையில், ஒரே வாரத்தில் 2.10 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்தது. குன்னூர் டீசர்வ் மையத்தில் ஏலத்திற்கு வந்த, 1.15 லட்சம் கிலோ 100 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 102.73 ரூபாயாக இருந்தது; 1.19 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. ரூ. 46.18 கோடி மொத்த வருவாய் கோவை ஏல மையத்தில், 5.26 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 4.69 லட்சம் கிலோ என 89.19 சதவீதம் விற்றது. சராசரி விலை, 134.18 ரூபாய் என இருந்தது. 6.30 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில் 4.35 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில் 4.26 லட்சம் கிலோ விற்பனையாகி, வருவாய் 5.67 கோடி ரூபாய் இருந்தது. கடந்த ஏலத்தை விட, 91 ஆயிரம் கிலோ வரத்து, 43 ஆயிரம் கிலோ விற்பனை அதிகரித்து, 63 லட்சம் ரூபாய் வருவாய் உயர்ந்தது. கொச்சி ஏல மையத்தில், 10.74 லட்சம் கிலோ வந்ததில், 10.15 லட்சம் கிலோ என 94.49 சதவீதம் விற்றது. சராசரி விலை, 169.44 ரூபாய் என இருந்தது. 17.20 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில், 9.09 லட்சம் வந்ததில், 8.57 லட்சம் கிலோ விற்றது; கடந்த ஏலத்தை விட, 1.65 லட்சம் கிலோ வரத்தும், 1.58 லட்சம் கிலோ விற்பனையும் இருந்தது. கடந்த ஏலத்தில், 14.35 கோடி ரூபாய் வருவாய் இருந்த நிலையில், இந்த ஏலத்தில், 2.85 கோடி ரூபாய் உயர்ந்தது. தென் மாநில அளவில் இந்த 4 தேயிலை ஏலங்களிலும், 46.18 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில் 40.36 கோடி ரூபாய் கிடைத்த நிலையில், இந்த ஏலத்தில், 5.82 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஒரே வாரத்தில் உயர்ந்தது.
14 minutes ago
15 minutes ago
16 minutes ago
16 minutes ago