வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்
குன்னுார்; குன்னுார் கேத்தி அம்பேத்கர் நகர் பகுதியில் வேகத்தடை அமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது.குன்னுார் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. எல்லநள்ளியில் இருந்து கேத்தி பாலாடா அம்பேத்கார் நகர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால், அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.இதே போல பள்ளி மாணவ, மாணவிகள் இவ்வழியாக நடந்து செல்லும் நிலையில், கனரக வாகனங்கள் வரும் போது, சிரமம் ஏற்படுகிறது. எனவே, அதிவேகத்தில் வாகனங்கள் வருவதை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.