உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலைகளில் நுங்கு விற்பனை காலநிலை மாற்றத்தால் கிராக்கி

சாலைகளில் நுங்கு விற்பனை காலநிலை மாற்றத்தால் கிராக்கி

கோத்தகிரி: கோத்தகிரி சாலைகளில் சமவெளி பகுதி தொழிலாளர்கள், நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வெயிலான காலநிலை நிலவுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தண்ணீர் தாகத்தை தணிக்கும் வகையில், நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.தென்காசி, பொள்ளாச்சி கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நுங்கு கொண்டு வரும் தொழிலாளர்கள், கோத்தகிரி பகுதியில் அறை எடுத்து தங்கி, விற்பனை செய்து வருகின்றனர்.ஒரு நுங்கு, 20 ரூபாய்க்கும், பதநீர், 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக வாங்குபவர்களுக்கு, விலை குறைத்து வழங்கப்படுகிறது. இதனை கோத்தகிரி வழியாக, ஊட்டிக்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் அதிகளவில் வாங்கி, தாகத்தை தணித்து செல்கின்றனர். தென்காசியை சேர்ந்த வியாபாரி சிவா கூறுகையில், ''கடந்த ஒரு வார காலமாக, வெயில் அடித்தாலும், லேசான காற்று வீசுவதால், நுங்கு விற்பனை, மந்தமாக உள்ளது. எதிர்வரும் நாட்களில், வறட்சி அதிகரிக்கும் என்பதால், விற்பனை அதிகரித்து வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், 10 முக்கிய சந்திப்புகளில், நுங்கு விற்பனை செய்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை