உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி

கூடலுார்:கூடலுாரில், சில்லறை பால் விற்பனை லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரியில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, சில்லறை விற்பனை செய்வதுடன், ஆவின் நிறுவனத்திற்கும் வழங்கி வருகின்றனர்.விவசாயிகளிடமிருந்து, ஒரு லிட்டர் பால், 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு, 44 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில், 'பால் லிட்டர் கொள்முதல் விலை, 3 ரூபாய்; சில்லறை விற்பனை விலை 4 ரூபாய்,' என, உயர்த்தப்பட்டது.இந்த விலை உயர்வை பல கூட்டுறவு சங்கங்கள் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தி உள்ளன. கூடலுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நேற்று முதல் பால் விலை உயர்வை அமல்படுத்தி உள்ளது. பால் விற்பனை விலையை திடீரென உயர்த்தியதால், உள்ளுர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பால் விலையை குறைக்க வலியுறுத்தியுள்ளனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அதிகாரிகள் உத்தரவுப்படி, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பால் உற்பத்தி விவசாயிகள் பயனடைவர். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை