| ADDED : ஜன 05, 2024 11:41 PM
ஊட்டி;தோட்டக்கலை இணை இயக்குனருக்கு, மாவட்ட தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் அனுப்பியுள்ள மனு:கடந்த, 6 ஆண்டுகளுக்கு மேலாக மாத சம்பளத்தை மாத இறுதியில் பெற்று வருகிறோம். கடந்த, செப்., மாதம் முதல் சம்பளம் மாத இறுதியில் வழங்காமல், மாதத்தின் முதல் வாரத்தில் பெற்று வருகிறோம். குறிப்பிட்ட நாளில் சம்பளம் வழங்காததால் அத்தியாவசிய தேவைகளை நிறை வேற்ற முடியாமல் தவித்து வருகிறோம். காலதாமதமாக ஊதியம் வழங்கப்படுவதால் பல்வேறு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாத இறுதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.