மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
23 minutes ago
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்
24 minutes ago
பந்தலுாரில் பறக்கும் நீலப்புலி வண்ணத்து பூச்சிகள்
25 minutes ago
குன்னுார்: குன்னுாரில் நடந்த ஹாக்கி லீக் போட்டியில் வென்ற, ஆறு அணிகளுக்கு சத்ய சாய் அறக்கட்டளை சார்பில், 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற் றாண்டு விழாவை முன்னிட்டு, 'ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரீஸ்' அமைப்பு மற்றும் சத்யசாய் சேவா மாருதி அறக்கட்டளை சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நடந்தது. ஏ,பி,சி என 3 டிவிஷன்களில், கடந்த ஆக., மாதம் முதல் சனி, ஞாயிறு தினங்களில், 85 போட்டிகள் நடந்தது. இறுதி போட்டியில், ஆலோரை அணி யுனைடெட் அணியை 2--1 ; பேரட்டி அணி இனியா அணியை 6 -5 ; தியான் சந்த் அணி, ஜி.பி.எம்., வாரியர் அணியை 2 -1 என்ற கோல் கணக்குகளில் வென்றன. அறக்கட்டளை சார்பில், வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு, தலா, 25,000 ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த மூன்று அணிகளுக்கு தலா, 15,000 ரூபாய் மற்றும் கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு தலைமை வகித்த உபதலை சத்ய சாய் சேவா மாருதி அறக்கட்டளை சுவாமி, மேகநாத சாய் பேசுகையில், ''நீலகிரியில் விளையாட்டு துறையில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்கை இழை ஹாக்கி மைதானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், அடுத்த ஆண்டு நடக்கும் மாவட்ட லீக் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, 2 லட்சம் ரூபாய், ரன்னர் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். தற்போதைய சூழலில், குடி, போதை இல்லாத இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும். அன்பு, ஒழுக்கம் ஆகியவற்றுடன், தேச வளர்ச்சியில் ஒன்றான விளையாட்டு துறையில் அனைவரும் பங்கேற்பது அவசியம்,'' என்றார். எம்.ஆர்.சி., சர்வதேச தடகள வீரர் லட்சுமணன், நிர்வாகிகள் அனிதா தேவாரம், ராஜேஷ் ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பு தலைவர் அனந்த கிருஷ்ணன், துணை தலைவர் சுரேஷ் குமார், பொருளாளர் ராஜா உட்பட கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
23 minutes ago
24 minutes ago
25 minutes ago