உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிதறி கிடக்கும் குப்பை; சுகாதார சீர்கேடால் பாதிப்பு

சிதறி கிடக்கும் குப்பை; சுகாதார சீர்கேடால் பாதிப்பு

குன்னுார் : 'குன்னுார் 'டென்ட்ஹில்' பகுதியில் சாலையோரம் வைத்த குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குன்னுார் டென்ட்ஹில் பகுதியில் இரும்பு கம்பிகளால் ஆன குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக செல்லும் பலரும் குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டாமல் சாலையிலேயே வீசி செல்கின்றனர். மேலும், உணவு கழிவுகளை தேடி நாய்கள் மற்றும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் வந்து செல்கின்றன.இங்குள்ள குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பலமுறை நகராட்சிக்கு இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த குப்பை தொட்டியால் ஈக்கள், கொசுக்கள் அதிகரித்து சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்குநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை