உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு

கூடலுார்;மசினகுடி, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி வரவேற்றார். பள்ளி தாளாளர் நந்தினி ரங்கசாமி தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளி அளவில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை