உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி ஆண்டு விழா; மாணவ, மாணவியருக்கு பரிசு

பள்ளி ஆண்டு விழா; மாணவ, மாணவியருக்கு பரிசு

ஊட்டி; ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில், 34 ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது. ஜெ.எஸ்.எஸ்., மருந்திய கல்லுாரியின் முதல்வர் மற்றும் ஜெ.எஸ்.எஸ்., பள்ளியின் தாளாளர் தனபால் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி.நிஷா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, 2024-25 ம் ஆண்டுக்கான பள்ளி ஆண்டறிக்கையை, பள்ளி முதல்வர் அனிதா ரமேஷ் வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது, ''வாழ்வில் உயர பள்ளி முக்கிய காரணமாக அமைகிறது. பள்ளி பருவமே வாழ்வின் சிறந்த பருவமாகும். பள்ளியில் புத்தக படிப்பு மட்டுமின்றி விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். பள்ளி பருவத்தின் நினைவுகள் என்றும் மனதில் மலர்ந்து இடம் பெற்றிருக்க வேண்டும்,'' என்றார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை