மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார்;கூடலுார் 'மேபீல்டு' ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அரசு அறிவித்துள்ள 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தின் கீழ், மூன்று நாள் சிறப்பு துாய்மை முகம் நேற்று, துவங்கியது.பள்ளி தலைமை ஆசிரியர் பால்விக்டர் தலைமை வகித்தார். முகாமை பி.டி.ஏ., தலைவர் ரஷீத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், தேசிய பசுமை படை மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று பள்ளி வளாகத்தை துாய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர்.இப்பணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியாமோள், ஆசிரியர்கள் குமார், ஸ்ரீனிவாசன், கற்பகவல்லி, பார்வதி, தஸ்ணி, சுஹைலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாம் நாளை நிறைவு பெறுகிறது.
03-Oct-2025