மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
6 hour(s) ago
ஊட்டி;ஊட்டி மார்க்கெட்டில் இரண்டாம் கட்ட பணிக்காக பழைய கடைகள் இடிக்கும் பணி துவங்கியது. ஊட்டி மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, பார்க்கிங் வசதியுடன், 180 கடைகள் கட்டப்படுகிறது.இதற்காக, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நகராட்சி கையகப்படுத்திய இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டது. இப் பணி மூன்று கட்டமாக நடைபெறுகிறது. கட்டட கழிவுகளை அகற்ற, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்ட கடைகள் அமைக்கும் இடங்களில் இருந்த கடைகள் அகற்றப்பட்டது. 17 கோடி ரூபாய் நிதியில் கடைகள் கட்டப்பட உள்ளது. தற்போது, இரண்டாம் கட்ட கடைகள் அமைக்கும் பணிக்காக பழைய கடைகள் இடிக்கும் பணி துவங்கியது. இதற்கான பூஜையில், நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார்உட்பட பலர் பங்கேற்றனர்.
6 hour(s) ago