மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : 'நோயுற்ற கோழிகள் மலிவான விலையில் சந்தையில் விற்பனை செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.ஊட்டியில், தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பலர் பங்கேற்று, கருத்துக்களை பரிமாறி கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:ஒப்பந்த கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வை ஈடு செய்யும் விதமாக, 2020, டிச., 13ம் தேதி முதல், பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு தீவன கட்டுபாடின்றி, இறைச்சி கோழிகளை விற்பனை செய்வோம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.மீண்டும், 8:00 முதல், 12:00 மணி நேர தீவன கட்டுப்பாட்டை நடைமுறை படுத்துவதன் மூலம், வணிகர்களின் வாழ்வாதாரம், இறைச்சியின் தரம், பொதுமக்கள், தொழிலாளர்களின் நலன் மற்றும் பொது சுகாதாரமும் மேம்படும்.உற்பத்தி நிறுவனங்கள் பண்ணைகளில் கழிக்கப்படும் கோழிகள் மற்றும் நோயுற்ற கோழிகளை மிக மலிவான விலையில் சந்தையில் விற்பனை செய்வதை தடை செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.உற்பத்தி நிறுவனங்கள், 2.5 முதல், 3.5 கிலோ வரை, இறைச்சி கோழிகளை வளர்த்து, அதிக தள்ளுபடி விலையில் சந்தையில் விற்பனை செய்தால், வியாபாரிகளுக்கு இடையே, கடும் போட்டி ஏற்படுத்துவதுடன், மிருது தன்மை இழந்த இறைச்சியால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.உற்பத்தி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் பெயரில், அனுமதி இல்லாமல் கோழிகளை விற்பனை செய்வது, தொடர் பிரச்னையாக உள்ளதால், அதனை நிறுத்த ஆவணம் செய்ய வேண்டும்.அரசு தனி மனிதனின் உணவு உரிமைகளை பறிக்கும் (நோ மீட் டே) இறைச்சி விற்பனையை தடை செய்யும் அரசாணையை விடுவிக்க கோரி, நீதிமன்றம் செல்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு மாநில பொருளாளர் ஜான் கென்னடி நன்றி கூறினார்.
03-Oct-2025