உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு மருத்துவமனையில் பழங்குடியினருக்கு தனியிடம்

அரசு மருத்துவமனையில் பழங்குடியினருக்கு தனியிடம்

கூடலுார்;'ஊட்டி, கூடலுார் அரசு மருத்துவமனைகளில் பழங்குடியினர்களுக்கு தனியிடம் ஒதுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.முதுமலை, தெப்பக்காட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்; மசக்கல் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம்; இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய டாக்டர் குடியிருப்பு கட்டட திறப்பு விழா, முதுமலை தெப்பக்காடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி வரவேற்றார்.அதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில்,''ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர சுகாதார மையங்களிலும் தற்போது நாய்கடி, பாம்பு கடி சிகிச்சைக்கு மருந்து இருப்பு வைக்கபட்டது. இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். நீலகிரியில், பழங்குடியினருக்கு 'சிக்கல் செல் அனமியா' நோய் குறித்து ஆய்வு செய்து, துவக்கத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். ஊட்டி, கூடலுார் மருத்துவமனைகளில் பழங்குடி மக்கள் சிகிச்சை பெற தனியிடம் ஒதுக்கப்படும்,''என்றார்.தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். விழாவில், முதுமலை துணை இயக்குனர் வித்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை