நகர்ப்புற வங்கியில் சேவைகள் துவக்கம்
பாலக்காடு,; கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் பகுதியில் நகர்ப்புற வங்கியின் புதிய சேவைகள் துவக்க விழா, நாளை (25ம் தேதி) மாலை 5:00 மணிக்கு மனிச்சேரி பகுதியில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.கலால் துறை அமைச்சர் ராஜேஷ் விழாவை துவக்கி வைக்கிறார். எம்.எல்.ஏ.,க்கள் மம்மிக்குட்டி, பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.'கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேச மறுசீரமைப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை துணைத் தலைவர் சிவதாசன் உட்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.