உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சத்தியமூர்த்தி நகரில் ஏழு தானியங்கி கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 15 வனத்துறை ஊழியர்கள்

சத்தியமூர்த்தி நகரில் ஏழு தானியங்கி கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 15 வனத்துறை ஊழியர்கள்

ஊட்டி; மஞ்சூர் அருகே வனவிலங்கு தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க, 7 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மஞ்சூர் அருகே சத்தியமூர்த்தி நகரில் கடந்த, 4ம் தேதி அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே சதீஷ்குமார்,38, என்ற கூலி தொழிலாளி கரடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனவிலங்கு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். சம்பவ பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 'சத்தியமூர்த்தி நகர் பகுதி மக்கள், கூண்டு வைத்து, தானியங்கி கேமரா பொருத்தி கரடியை பிடிக்க வேண்டும்,' என , வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

15 பேர் கொண்ட குழு

தொடர்ந்து, குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில், 15 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சத்தியமூர்த்தி நகரில், 2 இடத்தில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 7 தானியங்கி கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. கூண்டு வைத்து நான்கு நாட்களாகியும் இதுவரை வனவிலங்கு நடமாட்டம் தென்படவில்லை. பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. குந்தா ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில்,''சத்தியமூர்த்தி நகரில் வனத்துறை ஊழியர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 'பொதுமக்கள் தேவையில்லாமல் மாலை நேரங்களில் சுற்றித் திரிய வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிராம பகுதியை ஒட்டியுள்ள புதர்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கழிவு களை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ