| ADDED : ஜன 04, 2024 10:55 PM
பந்தலுார்:கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. வி.ஏ.ஓ. மாரிமுத்து வரவேற்றார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து, 'அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பழங்குடியின மக்கள் பெறும் வழிமுறைகள்,' குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, வங்கி கணக்கு, ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டதுடன் ஆலோசனைகளும் கூறப்பட்டது.'கிராமத்தில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு சென்று விட்டதால், இதே முகாமினை வேறொரு நாளில் தங்கள் பகுதியில் நடத்த வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தினர். 'மாவட்ட கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்று முகாம் நடத்தப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.