உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தைகள் காப்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

குழந்தைகள் காப்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

குன்னுார் : நீலகிரி மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில், குழந்தைகள் காப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் குன்னூரில், நடந்தது.சங்க மருத்துவ அதிகாரி ஆனந்த வள்ளி தலைமை வகித்தார்.கிரேக்மோர் எஸ்டேட் மருத்துவ அதிகாரி மீரா ஆனந்த் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற. 'கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட்' நிர்வாக அலுவலர் சத்தியசீலன், 'குழந்தைகளுக்கு சுத்தத்தை பராமரிப்பது; தடுப்பூசி முக்கியத்துவம்; குழந்தைகளின் மன நல ஆரோக்கியம், சத்துணவு முறைகள்,' குறித்து விளக்கம் அளித்தார்.'குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தயார்படுத்துதல்; சுகாதார முறைகள்,' குறித்து,சங்க அதிகாரி சுந்தர்ராஜ் பேசினார். களப்பணி அதிகாரி சுபாஷினி, செவிலியர் பழனியம்மாள் ஆகியோர் தடுப்பூசி அட்டவணையை பற்றி விளக்கம் அளித்தனர். அதில், பங்கேற்ற, 33 குழந்தை காப்பாளர் கள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை