உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில அளவிலான கபடி போட்டி கோப்பை வென்ற வீரர்கள்

மாநில அளவிலான கபடி போட்டி கோப்பை வென்ற வீரர்கள்

பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டியில், இளம் புயல் விளையாட்டு குழு, அத்திமாநகர் மற்றும் உப்பட்டி நண்பர்கள் இணைந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டியை நடத்தி வருகின்றனர். நடப்பாட்டுக்கான போட்டி கடந்த, 19 மற்றும் 20ம் தேதிகளில், உப்பட்டி எம்.எஸ்.எஸ். மைதானத்தில் நடந்தது. ராமர் வரவேற்றார். விழா ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், தங்கதுரை முன்னிலை வகித்தனர்.போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட அணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளி காட்டினர். அதில், 'கோவை டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணி முதல் இடத்தையும், அத்திக்குன்னா டவுன் அணை, 2- ம் இடம், திருச்சி எஸ்.எம் பள்ளி அணி, 3-ம் இடம், இளம் புயல் ஏ அணி, 4-ம் இடம் பிடித்தன. முதல் பரிசுக்கான கோப்பை வக்கீல் கணேசன், 1 லட்சம் ரூபாய் பண முடிப்பை வழங்கினார். ராயின், 2-ம் பரிசுக்கான கோப்பை; ஐயப்பன் மற்றும் மணிகண்டன், 50 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு; மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் வாசிம்ராஜா, 3-ம் பரிசுக்கான கோப்பை; மருந்தாளுனர் ராமநாதன், தோட்டக்கலை துறை அலுவலர் ஜெயலட்சுமி வழங்கினர். 4-ம் பரிசுக்கான கோப்பை மணியபிள்ளை,20 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பு கவுன்சிலர் முரளிதரன், வினோத் ஆகியோர் வழங்கினர். மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த அணிக்கான பரிசு மற்றும் பணமுடிப்புகளும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை