| ADDED : ஜன 19, 2024 12:26 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனின் புதிய இன்ஸ்பெக்டராக, மணிகண்டன் பொறுப்பேற்று கொண்டார்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், இதற்கு முன் தாராபுரம், காங்கேயம் உட்பட பகுதிகளில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். இவர் கூறுகையில், ''மேட்டுப்பாளையத்தில் போதைப் பொருள் விற்பனை முற்றிலும்ஒழிக்கப்படும். போதைப் பொருட்களை உபயோகித்தால், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.வெளியூர் செல்லும் மக்கள், போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லலாம். அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.---