உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தையை கடித்த தெருநாய்கள்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

குழந்தையை கடித்த தெருநாய்கள்; நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

குன்னுார்; குன்னுார் டென்ட்ஹில் பகுதியில் மக்களை கடிக்கும் தெரு நாய்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் டென்ட்ஹில் பகுதியில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு, 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகின்றன. இது குறித்து, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் மன்சூர் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்,நேற்று காலை இப்பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையை தெரு நாய் கடித்துள்ளது. குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊர் பிரமுகர் ரமேஷ் கூறுகையில், இப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு நேரங்களில் வருபவர்களை விரட்டி கடிக்கிறது. பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு கிடைக்காவிட்டால், மக்களை திரட்டி, போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.*கோத்தகிரி பஸ் நிலையத்தில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குன்னுார் பஸ் நிறுத்தம், பயணியர் நிழற்குடையில் 'டேரா' போட்டுள்ள நாய்களால், பயணியர் இருக்கையில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், கூட்டமாக வரும் நாய்கள் அங்கும் இங்கும் ஓடுவதால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் நாய்கள் குறுக்கே வரும் போது, தடுக்கி விழுந்து காயமடைந்து வருவது தொடர்கிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை