பள்ளிகளில் மரக்கன்று நடவு செய்த மாணவர்கள்
பந்தலுார், ; தேவாலா வனத்துறை, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, தேவாலா குளோபல் உயர்நிலை பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை நடத்தின.வனச்சரகர் சஞ்சீவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம், 'சில்ரன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜீத், பள்ளி நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்ததுடன், மரக்கன்றுகள் நடப்பட்டன. *மேபீல்டு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பாபு தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உப்பட்டி எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஆலி, முதல்வர் கவிதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. எருமாடு பழங்குடியின கிராமத்தில் இயற்கை ஆர்வலர் சங்கீதா தலைமையில், மரக்கன்று நடும் சாதனையாளர் சிறுவன் ரக்ஷித், பழங்குடியின மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, வீடுகள் முன்பாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.