மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கோத்தகிரி:கோத்தகிரியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு, உடல்நல குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கோத்தகிரி ஈளாடா அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் குருகிருஷ்ணன், கவிராஜன், தமிழரசன், மணிரத்னம் மற்றும் கார்த்திக் ஆகியோர், பள்ளி ஆசிரியர் அறைக்கு சென்று, அதிக சத்து மாத்திரைகளை உட்கொண்டு உள்ளனர். சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த ஆசிரியர்கள் மாணவர்களை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களில், தமிழரசன் உள் நோயாளியாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள நான்கு மாணவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலைமை ஆசிரியர் சீனிவாசன் கூறுகையில், ''சத்து மாத்திரைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் அதனை எடுத்து உட்கொண்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. மாணவர்களுக்கு வயிறு வலி ஏற்பட்டதை அடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். தற்போது அனைவரும் நலமாக உள்ளனர்,'' என்றார்.
03-Oct-2025