உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம்; விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய சத்யசாய் அறக்கட்டளை

கோடை கால ஹாக்கி பயிற்சி முகாம்; விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய சத்யசாய் அறக்கட்டளை

குன்னுார்; குன்னுாரில் நடந்து வரும் கோடை கால ஹாக்கி பயிற்சி முகாமில், வீரர் வீராங்கனைகளுக்கு சாய் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி, உபதலை அரசு மேல்நிலை பள்ளி மைதானங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரிஸ் மற்றும் மாருதி சேவா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், மாவட்ட அளவிலான கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்நிலையில், உபதலை சத்ய சாய் அறக்கட்டளை சார்பில், சுவாமி நவீன் சாய் மேற்பார்வையில், வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி வருண் சாய், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரிஸ் அமைப்பு துணைத் தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திரன், சுப்ரமணி, மகேஷ் சுரேஷ், ரத்தீஷ் ஹாக்கி அனுபவங்களை வீரர்களுடன் பகிர்ந்தனர். 'கேலோ இந்தியா' பயிற்சியாளர்கள் சிஜுமோன், சவுந்தர், விஷ்ணு, சிவா பயிற்சி அளித்து வருகின்றனர். ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை