உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தற்காலிக கடைகளால் வாகனங்கள் நிறுத்த சிக்கல்

தற்காலிக கடைகளால் வாகனங்கள் நிறுத்த சிக்கல்

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி தற்காலிக கடைகள் வைப்பதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி- ஊட்டி, குன்னுார் வழித்தடத்தில், கட்டபெட்டு 'இன்கோ' தொழிற்சாலை சந்திப்பில், சாலை விசாலமாக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு, தனியார் வாகனங்கள் நிறுத்த வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது. சாலையின் இரு புறங்களிலும், 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்பட்டு வருகிறது. போலீசாரின் கண்காணிப்பு 'பேரிகார்டு' மேடை அருகே, சமவெளி பகுதியை சேர்ந்தவர்கள், மெத்தை, விரிப்பு மற்றும் ஆடை வகைகள் என, பல்வேறு பொருட்களை வைத்து அடிக்கடி கடை அமைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், உள்ளூர் வாகனங்கள் நிறுத்த முடியாமலும், சாலையோர திண்ணைகளில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை ஓரத்தில், இடையூறாக அடிக்கடி கடைகளை வைக்க அனுமதிக்க கூடாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை