உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில்களில் தை பண்டிகை சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவில்களில் தை பண்டிகை சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

மஞ்சூர: மஞ்சூர் சுற்றுவட்டார கிராமங்களில் தை பண்டிகையை ஒட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மார்கழி மாதத்தை ஒட்டி கடந்த ஒரு மாதமாக அந்தந்த கிராமங்களில் உள்ள கோவில்களில் அதிகாலையில் மார்கழி பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. மார்கழி மாதம் முடிந்து, தை பிறந்ததை ஒட்டி, கோவில்களில் அதிகாலையில் கணபதி பூஜையை தொடர்ந்து அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்து வருகிறது.இந்நிலையில், மஞ்சூர் அருகே குந்தா துனேரி கிராமத்தில் நாராயணமூர்த்தி கோவிலில் அதிகாலையில் கணபதி பூஜையை தொடர்ந்து பஜனை நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், மஞ்சூர் மாரியம்மன் கோவில், அன்னமலை முருகன் கோவில்,கீழ்குந்தா, கரிய மலை, பாக்கோரை உள்ளிட்ட கிராமங்களில் தை முதல் நாளை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை