உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை இடித்த குடியிருப்பு உடனடியாக சீரமைத்த நிர்வாகம்

யானை இடித்த குடியிருப்பு உடனடியாக சீரமைத்த நிர்வாகம்

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளி 'டான்டீ' உட்பட்ட பகுதிகளில் புல்லட் யானை, குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியது.இதனால், வீட்டு சுவர் பாதிக்கப்பட்டு குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியை 'டான்டீ' உதவி கள நடத்துனர் கண்ணகி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, இடிந்த குடியிருப்பு பகுதியை சீரமைத்து தர பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர். வார்டு உறுப்பினர் கோபால் மற்றும் டான்டீ நிர்வாகம் இணைந்து இரண்டு குடியிருப்புகளையும் உடனடியாக சீரமைத்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை