உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிவாரணம் தர கோரிக்கை பழங்குடியினர் போராட்டம்

நிவாரணம் தர கோரிக்கை பழங்குடியினர் போராட்டம்

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம்; முதுமலை ஊராட்சி பகுதியில் வசித்து வரும், பழங்குடியினர் மற்றும் மவுட்டாடன் செட்டி மக்களை, மாற்றிடம் திட்ட மூலம், வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இத்திட்டத்தில் பழங்குடியினருக்கு, மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க கோரி, பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், முதுமலை நுழைவு வாயில் பகுதியான, போஸ்பாராவில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், 'அரசின் மாற்றிட திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், மவுண்டாடன் செட்டி மக்களுக்கு நிவாரண தொகையாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பழங்குடியினருக்கு வழங்கிய நிவாரண தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.'வன உரிமை அங்கீகாரம் சட்டம், 2006ன் கீழ், அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்' என, பழங்குடியினர் வலியுறுத்தினர்.தொடர்ந்து, பழங்குடியின மக்களிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ