ஊட்டி தொட்டபெட்டா அழகை கண்டு ரசித்த கவர்னர்
ஊட்டி:ஊட்டி தொட்டபெட்டா அழகை, மாநில கவர்னர் ரவி குடும்பத்துடன் கண்டு ரசித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக மாநில கவர்னர் ரவி, 15 ம் தேதி வருகை தந்தார். ஊட்டி ராஜ்பவனில் தங்கியுள்ள அவர் நேற்று முன்தினம், தலைகுந்தா அருகே அமைந்துள்ள முத்தநாடு மந்து தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு, தனது மனைவி லட்சுமியுடன் சென்றார். இந்நிலையில், நேற்று காலை கவர்னர் குடும்பத்தினருடன் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்றார். அங்கு, இயற்கை காட்சிகளை கோபுரத்தில் இருந்த பைனாகுலரில் கண்டு ரசித்தார். தொடர்ந்து, அங்குள்ள 'ராக்' பகுதிக்கு சென்ற அவர், இயற்கை அழகை ரசித்தார்.தொடர்ந்து, ஊட்டி 'ஸ்டோன் ஹவுஸ்' பகுதிக்கு சென்ற அவர், அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதனை அடுத்து, ராஜ்பவனுக்கு திரும்பினார். கவர்னரின் வருகையை ஒட்டி, தொட்டபெட்டா, 'ஸ்டோன் ஹவுஸ்' பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (18ம் தேதி) காலை கார் மூலம் கோவை செல்கிறார்.