உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகழியில் விழுந்த முதியவர் பலி

அகழியில் விழுந்த முதியவர் பலி

மேட்டுப்பாளையம் : நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ், 70. இவரது மகன் சிவராஜ், 37, சிறுமுகை உளியூரில் வசித்து வருகிறார். பால்ராஜ் தனது மகன் சிவராஜுடன் தங்கியுள்ளார்.கடந்த 6ம் தேதி பால்ராஜ் ஆடுகளுக்கு தீவனம் பறிக்க வீட்டிற்கு அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக யானைகளுக்கு தோண்டப்பட்ட அகழியில் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை