உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இரு மாநிலத்தை இணைக்கும் சாலை சேதமடையும் அபாயம்

 இரு மாநிலத்தை இணைக்கும் சாலை சேதமடையும் அபாயம்

கூடலுார்: கூடலுார் இரும்புபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் தொடரும் மண் அரிப்பால், இரு மாநிலத்தை இணைக்கும் சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடலுார் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கல்லுாரியில் இருந்து வெளியேறும் மழைநீரால், இரும்புபாலம் அருகே உள்ள தனியார் இடத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் மழை நீர், வழிந்தோட சரியான கால்வாய் வசதி இல்லாததால், கோழிக்கோடு சாலையை கடந்து பாண்டியார் - - புன்னம்புழா ஆற்றில் கலக்கிறது. நடப்பாண்டு, பருவமழையின் போது இப்பகுதியில் வழிந்தோடிய மழை நீரால் ஏற்பட்ட மண் சரிவால் சாலையோரம் சேதமடைந்து, தமிழக -கேரளாவை இணைக்கும் சாலை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு, செய்து, மண் அரிப்பை தடுப்பதுடன், சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை