உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆபத்தை ஏற்படுத்தும் சாலை சீரமைப்பு பணி அவசியம்

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை சீரமைப்பு பணி அவசியம்

பந்தலுார் ; பந்தலுார் - முக்கட்டி சாலையை சீரமைக்காமல் உள்ளதால் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. பந்தலுார் பகுதியில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கூடலுார் மற்றும் தேவர்சோலை பகுதிகளுக்கு செல்லும் சாலை உப்பட்டி, முக்கட்டி வழியாக அமைந்துள்ளது.இரு மாநிலங்களை இணைக்கும் இந்த சாலை மிகவும் குறுகலான கிராமப்புற சாலையாக உள்ளதால், கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத சூழல் தொடர்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் டிப்பர் லாரிகளின், வரத்து அதிகரிப்பால் பள்ளி பஸ் மற்றும் பிற வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதில், பெரும்பாலான இடங்களில் சாலையின் ஒரு பகுதி தாழ்வாக அமைந்துள்ள நிலையில், வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த சாலையில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள முன்வராத நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், வாகனங்கள் அதிகம் செல்லாத பிற சாலைகளை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரும் இந்த சாலையை, அகலப்படுத்தவும், தேவைப்படும் இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டியது அவசியம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை