உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உடுக்கை அடித்து கோஷம்

உடுக்கை அடித்து கோஷம்

ஊட்டி : ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கு முழங்கி, உடுக்கை அடித்து கோஷம் எழுப்பட்டது. நாடுமுழுவதும் இந்து முன்னணி சார்பில், பயங்கரவாதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத் தலைமை வகித்தார். குன்னூர் நகர தலைவர் ஹரி, பொறுப்பாளர் கார்த்திக், ஊட்டி நகர செயலாளர் ராஜேந்திரன், விஜய், பாலமுரளி முன்னிலை வகித்தனர். கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பயங்கரவாதத்துக்கு எதிராக பேசினார். கோவை - நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பயங்கரவாத செயல்களை தடுக்கவும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி உடுக்கை அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ