உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை விபத்தில் மூவர் காயம்: எருமாடு போலீசார் விசாரணை

சாலை விபத்தில் மூவர் காயம்: எருமாடு போலீசார் விசாரணை

பந்தலுார்:பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் இருந்து கையுன்னி என்ற இடத்தை நோக்கி, நேற்று மதியம் மூன்று பேர் காரில் வந்துள்ளனர். கப்பாலா என்ற இடத்தில் அரசு பழங்குடியினர் பள்ளி அருகே, தமிழக-கேரளா இணைப்பு சாலையில் வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. அதில், நிலை தடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்தது.நான்கு டயர்களும் வெடித்த நிலையில், காரில் பயணம் செய்த எருமாடு பகுதியை சேர்ந்த சாபு,49, விஷ்ணு,32, கையுன்னியை சேர்ந்த டென்னிஸ்,47, ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். எருமாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி