உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்

மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்

கூடலுார்: நீலகிரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மதியம் கூடலுார், நடுவட்டம், டி.ஆர்., பஜாஜ், சாண்டினல்லா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. காற்றும் வீசியது. இந்நிலையில், மதியம், 3:15 மணிக்கு, சாண்டினல்லா அருகே, கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், ஊட்டியில் இருந்து கூடலுார், கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள், சாலையின் இருபுறமும், நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். தகவல் அறிந்து வந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள், மரத்தை அறுத்து அகற்றினர். தொடர்ந்து, 4:10 மணிக்கு வாகன போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி