மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
23 minutes ago
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்
24 minutes ago
பந்தலுாரில் பறக்கும் நீலப்புலி வண்ணத்து பூச்சிகள்
25 minutes ago
வால்பாறை: கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்துள்ளதால், கனரக வாகனங்கள் செல்ல, திருச்சூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர். அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் மலைப் பாதையில் யானைக்காயம் அருகே, கும்மட்டியில் ஒரு மதகு பாலம் இடிந்து விழுந்ததாலும், சாலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளதாலும், 17ம் தேதி முதல் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவிக்கு எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், கேரளாவில் வரும் டிச., மாதம், 11ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் வாகன போக்கு வரத்துக்கு தடை விதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வால்பாறையில் இருந்து, அதிரப்பள்ளி வரும் வழியில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ரோட்டை வரும், 22ம் தேதிக்குள் பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும். அது வரை, இருமாநிலத்தில் இருந்தும் இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் சாலை சேதமடைந்த பகுதி யில் பயணியரை இறக்கி விட்டு, மறுபுறத்தில் மீண்டும் பயணியை ஏற்றி செல்லாம். சுற்றுலா வாகனங்களும் இந்த நடைமுறையை பின்பற்றி வழக்கம் போல் அதிரப்பள்ளி அருவி வழியாக சாலக்குடிக்கு செல்லாம். சாலை சீரமைக்கும் பணி நிறைவடைந்த பின், வால்பாறை - அதிரப்பள்ளி இடையே வழக்கம் போல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 minutes ago
24 minutes ago
25 minutes ago