மேலும் செய்திகள்
கொட்டும் மழையிலும்பள்ளிக்கு சென்ற குழந்தைகள்
19 hour(s) ago
ஏலமன்னாவில் அபாய மரங்கள் அகற்றம்: வாகன ஓட்டிகள் நிம்மதி
19 hour(s) ago
இடைவிடாது பெய்த மழை; சிரமத்துக்குள்ளான பயணிகள்
19 hour(s) ago
ஊட்டி;'நீலகிரியில் அபாயகரமான மரங்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து சில நாட்கள் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடந்த மூன்று நாட்கள் மழை சற்று ஓய்ந்தாலும் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றுக்கு, ஊட்டி, குந்தா, குன்னுார், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் ஏராளமான இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விழுந்த 140 மரங்கள்
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த நாளிலிருந்து, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார், குன்னுார் பகுதிகளில், 140 பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. போர் கால அடிப்படையில் மரங்கள் அறுத்து அகற்றப்பட்டன.எனினும், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான அபாயகரமான மரங்கள் எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால், மக்கள் பருவமழை சமயத்தில் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதி தேவையில்லை
குறிப்பாக, குடியிருப்பு அருகாமையிலும், சாலை, பள்ளி அருகே உள்ள அபாயகரமான மரங்களால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், நேற்று, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்திலும் அபாயகரமான மரங்கள் அகற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்துக்கு பின், எம்.பி., ராஜா கூறுகையில், ''பருவ மழையில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது. உடனுக்குடன் அகற்றப்பட்டது. அபாயகரமான மரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. குடியிருப்புகள்; பள்ளி அருகே மிகவும் அபாயகரமான மரங்களை அகற்ற எந்த துறையிடமும் அனுமதி ஏதும் பெற தேவையில்லை. அந்தந்த பகுதியில் உள்ள வன அலுவலர்கள் ஆய்வு செய்து தாமதமின்றி அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்கள் அபாயகரமான மரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பருவ மழைக்கு மாவட்ட முழுவதும், 101 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீட்டிற்கு தலா, 8,000 ரூபாய் வீதம், 8.08 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. தவிர, பயிர் சேதம், தடுப்பு சுவர் சேதங்கள் உள்ளிட்டவை குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் பெற அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்துரு வைக்கப்பட்டுள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago