மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
15 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
16 hour(s) ago
சூலுார் : சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன் புதுார் அங்காளம்மன் கோவில் குண்டம், தேர்த் திருவிழா கடந்த, 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று காலை தேருக்கு மகுடம் ஏற்றப்பட்டது. மாலை குண்டம் திறந்து கரும்பு அடுக்குதல் நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு குண்டத்துக்கு பூப்போடப்பட்டது. இன்று காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்குதல், 12:00 மணிக்கு அக்னி அபிஷேகம் நடக்கிறது. மாலை, 3:30 மணிக்கு அங்காளம்மன், பேச்சியம்மன் உற்சவ மூர்த்திகள் தேருக்கு எழுந்தருளுகின்றனர். மாலை, 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இதேபோல், சிவராத்திரியை ஒட்டி, சூலுார் கிழக்கு அங்காளம்மன் கோவிலில் இன்று காலை, 8:00 மணிக்கு குண்டம் திருவிழா நடக்கிறது.
15 hour(s) ago
16 hour(s) ago