உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாளை காதலர் தினம்; கொய்மலர் விலை உயர்வு ;பிளாஸ்டிக் பூக்கள் தடை அவசியம்

நாளை காதலர் தினம்; கொய்மலர் விலை உயர்வு ;பிளாஸ்டிக் பூக்கள் தடை அவசியம்

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில், லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா, கிரிசாந்தம் உள்ளிட்ட கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆரம்பத்தில், 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது, 70 பேர் மட்டுமே விவசாயம் தொடர்கின்றனர். கடந்த சில மாதங்களாக விலை குறைந்ததுடன், விற்பனையும் பாதித்தது.இந்நிலையில், முகூர்த்த நாட்கள், ஓணம் பண்டிகை காலங்களில் மலர்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது, காதலர் தினம் வருவதால், 'ஒரு லில்லியம், 30 ரூபாய், ஓரியன்டல் 60 ரூபாய், கார்னேஷன் 12 ரூபாய், ஜெர்பரா 7 ரூபாய்,' என, தற்போது விற்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட கொய்மலர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வாஹிப் சேட் கூறுகையில், ''காதலர் தினத்திற்கு ரோஜா மலர்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், தற்போது முகூர்த்த தினங்களுக்கு தான், கொய்மலர்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களை விட தற்போது விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. விழா காலங்கள், மற்றும் திருமண மண்டபங்களில் 'பிளாஸ்டிக்' பூக்கள் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குன்னுார், ஊட்டி நகராட்சியில் திருமண மண்டபங்களில் இதற்கு தடை விதித்ததை போன்று நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி