உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  டால்பின் நோஸ் காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

 டால்பின் நோஸ் காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குன்னுார்: குன்னுாரில் சீரமைப்புக்காக மூடப்பட்ட டால்பின்நோஸ் காட்சிமுனை நேற்று திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது . பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக, குன்னுாரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டால்பின்நோஸ் காட்சி முனை சீரமைப்பு பணிகளுக்காக, 3 மாதம் மூடப்பட்டிருந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்று நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. அவ்வப்போது பனிமூட்டம் நிலவியதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதால், கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்கு பகுதிகளை சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை