உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: 'பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.பி.எப்., மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன்தலைமையில், சி.ஐ.டி.யு., மாவட்ட பொரு ளாளர் நவீன்சந்திரன் கோரிக்கையை விளக்கி பேசினார். தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்குஅடி பணியக்கூடாது; இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியா-, இங்கிலாந்து வர்த்தகத்தை ரத்து செய்ய வேண்டும்; பொதுதுறையையும் பொது சேவைகளையும் தனியாரிடம் தாரைவார்க்க கூடாது; எந்த ரகசிய வர்த்தக ஒப்பந்தமும் செய்யக்கூடாது, அனைத்து ஒப்பந்தங்களும் லோக்சபாவிலும் பொதுமக்கள் ஆலோசனையிலும் நிறைவேற்ற வேண்டும்,' என்றனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் இப்ராஹிம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், எல்.பி.எப்., கவுன்சில் செயலாளர் ஜெயராமன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை