உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பழைய மீன்கள் விற்ற வியாபாரிக்கு அபராதம்

 பழைய மீன்கள் விற்ற வியாபாரிக்கு அபராதம்

குன்னுார்: குன்னுார் மார்க்கெட்டில் மீன் கடைகளில் நடத்திய திடீர் ஆய்வில் பழைய மீன்கள் வைத்திருந்த கடைக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், ஊட்டி மீன்வளத்துறை ஆய்வாளர் சிவசூரியன் தலைமையில் மேற்பார்வையாளர்கள் ஜெயக்குமார், ஜீவானந்தம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஷாஜகான் என்பவரின் கடையில் வைத்திருந்த பழைய மீன்கள், 3 கிலோ பறிமுதல் செய்து பெனாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,'பழைய மீன்கள் வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மீன்களில் 'பார்மலின்' பதப்படுத்தும் போது ஈ மொய்க்காது. நீலகிரியில் பார்மலின் பயன்படுத்துவது குறித்து இதுவரை பிடிக்கப்படவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை