உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்குவரத்து விதிகள் மாணவர்களுக்கு அறிவுரை

போக்குவரத்து விதிகள் மாணவர்களுக்கு அறிவுரை

ஊட்டி: ஊட்டி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஊட்டியில், போக்குவரத்து போலீசார் பொது இடங்கள், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத, வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், போக்குவரத்து போலீசார், எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில், சேரிங்கிராஸ் பகுதியில் வாகன சோதனை பணி நடந்தது. அவ்வழியாக, ெஹல்மெட் அணியாமல், 'சீட் பெல்ட்' போடாமலும் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக்கல்லுாரி சாலையில் நின்று சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் பலர் ெஹல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் வந்தனர். அவர்களில், 30 மாணவர்களை நிற்க வைத்து, போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ